என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆர்என் ரவி"
- இன்றைய கல்வி முறையில் நாம் பாரதம் என்றால் என்ன என்று நம் குழந்தைகளுக்கு சொல்வது இல்லை.
- மதங்கள் அனைத்தும் சமம் என சொல்வது அரசியல் வாதம்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒப்பிட்டு கவிதை நோக்கில் ஆய்வு செய்யும் பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. இதில் திருவள்ளுவர் கபீர், தாசர் வேமனா ஆகிய மூவரின் மொழியியல் மற்றும் இலக்கிய திறன் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்த 2 நாட்கள் அறிவுசார் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் வெவ்வேறு இடத்தில் இவர்கள் பிறந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையை இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்திய இலக்கியங்களை எந்த மொழியில் படித்தாலும் சில ஒற்றுமைகள் இருக்கும். எப்படி ஒற்றுமையோடு வாழ முடியும் என்பதை கோடிட்டு காட்டப்பட்டிருக்கும்.
இன்றைய கல்வி முறையில் நாம் பாரதம் என்றால் என்ன என்று நம் குழந்தைகளுக்கு சொல்வது இல்லை. இந்தியாவை தான் சொல்லி தருகிறோம். பாரதம் என்பது இந்தியாவை விட பெரியது. பாரதம் என்பது பொலிட்டிகள் ஸ்டேட் அல்ல. ஐரோப்பிய வகைப்படுத்துதலே பொலிட்டிகள் ஸ்டேட். பாரதம் அதை விட பெரியது.
பாரதம் இந்தியாவை விட பழமையானது. பாரத் என்று அழைக்கும் போது அரசியல் நாடு இல்லை. ஆனால் இந்தியா என்று அழைக்கும்போது பொது அரசியல் இருக்கிறது. ஒரு மரத்தின் இரு இலைகள் ஒன்று போல் இருப்பது இல்லை. ஆனால் அது வேறு வேறானவை அல்ல. அது போல பாரதம் என்பது பிரிக்க முடியாதது. ஆனால் வேறு வேறானவை. ஆனால் ஒன்றானது அதனை பிரிக்க முடியாது.
பாரதம் என்பது மதத்தின் அடிப்படையிலானது இல்லை. தர்மத்தின் அடிப்படையிலானது. மதங்கள் அனைத்தும் சமம் என சொல்வது அரசியல் வாதம். ஒவ்வொரு மதங்களும் வெவ்வேறு கூறுகள் கொண்டவை. தர்மம் தான் அனைத்தையும் இணைப்பது.
பாரதம் என்றால் சாதி, மதம் இல்லை. பாரதம் என்பது தார்மீக தர்ம நாடு. நாம் எல்லாம் ஒரே குடும்பம் என்பதே பாரதம். இந்த ஒற்றுமையை இந்த மூன்று புலவர்களும் சொல்லி உள்ளதை பார்க்க முடிகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
- டெல்லி கணேஷின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி கணேஷின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
டெல்லி கணேஷ் அவர்கள், தனது ஒப்பற்ற பன்முகத் திறமையால், எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, எல்லைகளைக் கடந்து சினிமா மற்றும் நாடக உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். நிரப்ப முடியாத அளவுக்கு அவரது மறைவு மிகவும் கடினமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டுள்ளார்.
"Thiru Delhi Ganesh, with his unmatched versatility, breathed life into countless characters, transcending genres and leaving an indelible mark on the world of cinema and theatre. His demise has left a void that would be very difficult to fill. My deepest condolences to his… pic.twitter.com/ub7L3aS55y
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 10, 2024
- ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.
- ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்.
தமிழ் நாடு மாநில ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது, அரசு ஆவணங்களுக்கு பதில் அளிக்க காலதாமதம் செய்வது என ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலில் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தமிழகத்திற்கான ஆளுநர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பதிலாக தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக வி.கே. சிங் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏராளமான தேர்தல்களில் மேலிட பொறுப்பாளராக பணியாற்றியவர், முன்னாள் மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் வி.கே. சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார்.
இதுகுறித்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " ஆர்.என்.ரவி ஆளுனரா? ஆரியநரா?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலடி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
இனவாத கருத்துக்கள், தவறான குற்றச்சாட்டுகளை அவசரகாதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன்.
முதல்வர் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாள் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஒவ்வொரு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பது அவருக்கு தெரியும்.
சமீபத்தில் கூட வடகிழக்கு மாநிலத்தில் அசாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாத கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது. முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சிறப்பு பூஜை நடைபெற்ற இடத்தில் விநாயகர், அயோத்தி பால ராமர் உள்பட பல்வேறு சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.
- கவர்னர் மாளிகையில் வருகிற 12-ந் தேதி வரை கொலு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. கவர்னர் மாளிகையில் உள்ள பாரதி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை, கவர்னர் ஆர்.என்.ரவி பொதுமக்கள் பார்வைக்காக நேற்று தொடங்கி வைத்தார். கொலுவை காண கவர்னர் மாளிகை வந்த பொதுமக்களை, கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர்.
கொலுவில் 5 படிகளில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், ராமர், சீதை, லட்சுமணன், அனுமன், கிருஷ்ணர், திருப்பதி வெங்கடாஜலபதி, அஷ்டலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, துர்கை, விஷ்ணுவின் தசாவதாரங்கள், ராகவேந்திரர், நடராஜர், பாண்டுரங்கர், அய்யப்பன், காளி, சாய்பாபா உள்பட சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.
சிறப்பு பூஜை நடைபெற்ற இடத்தில் விநாயகர், அயோத்தி பால ராமர் உள்பட பல்வேறு சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.தொடர்ந்து, நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று, பாரதி மண்டபத்தில், பாரதி திருமகனின் வில்லிசை பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
கவர்னர் மாளிகையில் வருகிற 12-ந் தேதி வரை கொலு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கொலு வழிப்பாட்டு நிகழ்ச்சியும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் தமிழ் கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. இதில், ஏற்கனவே விண்ணப்பித்த பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெற்று வருவது பெருமைக்குரியது.
- ஒருசில கல்வி நிறுவனங்களில் மட்டுமே பி.எச்.டி.க்கான கல்வி தரம் சிறப்பாக உள்ளது.
சென்னை:
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு-2024 (என்.ஐ.ஆர்.எப்.) தரவரிசையில் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு விழாவும், தமிழ்நாட்டின் உயர் கல்வி சிறப்பு குறித்த கருத்தரங்கமும் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில், என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் முன்னிலையில் இருந்த 11 உயர் கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளை கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
நாட்டின் சிறந்த கல்லூரிகளில் முதல் 20 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த 28 கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெற்று வருவது பெருமைக்குரியது. இந்த நிகழ்ச்சி தற்போது 3-வது முறையாக நடைபெறுகிறது. இதன் நோக்கம் மாநிலத்தில் இருக்கும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்ற கல்வி நிறுவனங்களுடன் கலந்து பணியாற்றாமல் தனியாக செயல்படுவதை மாற்றி, மற்ற கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு ஊக்குவிப்பதாகும்.
தமிழகத்தில் ஆராய்ச்சி (பி.எச்.டி) படிப்புக்கான கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். பி.எச்.டி. முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அதன் தரம் திருப்திகரமாக இல்லை. ஒருசில கல்வி நிறுவனங்களில் மட்டுமே பி.எச்.டி.க்கான கல்வி தரம் சிறப்பாக உள்ளது.
எனவே, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பி.எச்.டி. கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். முதுநிலை படிக்கும் போதே இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை (ஜெ.ஆர்.எப்) மற்றும் 'நெட்' தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.
ஒரு நாடு வளர வேண்டும் என்றால், அந்த நாடு அறிவுசார் சொத்துகளை அமைத்துக்கொள்ள வேண்டும். உலகின் அறிவுசார் சொத்துகளில் சீனா 46 சதவீதம் பெற்றுள்ளது. அதை மனதில் கொண்டு நம் நாட்டின் அறிவுசார் சொத்துகளை உயர்த்துவதற்கு அதிக தரம் கொண்ட பி.எச்.டி. படிப்புகளை கொண்டுவர வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் உயர்ந்துள்ளது. மேலும், அறிவுசார் சொத்துகளையும் உருவாக்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மத்திய அரசு மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து நிதி வழங்குகிறது.
- பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும்.
சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:
* மத்திய அரசு மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து நிதி வழங்குகிறது.
* பிஎம்ஸ்ரீ திட்டத்தை முன்னர் ஏற்றுக்கொண்டு தற்போது தமிழக அரசு மறுக்கிறது.
* பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும்.
* இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
* தமிழக பள்ளிகளின் தரத்தை உட்கட்டமைப்பு, கற்றல் திறனை மேம்படுத்த பிஎம்ஸ்ரீ பள்ளிகள் மிகவும் அவசியம் என்று அவர் கூறினார்.
- 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் மாநில புத்தகங்களில் இருந்து தான் டிஎன்பிஎஸ்சி-க்கு பயில்வோர் பயன்பெறுகின்றனர்.
- PM Sri புதிய திட்டங்களை நீங்கள் புகுத்தினாலும் கமிட்டி அமைத்து விசாரிப்போம்
சென்னை சேத்துப்பட்டில் நேற்று நடைபெற்ற கே.டி.சி.டி பள்ளி நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக பாடத்திட்டத்தின் தரம் பற்றி விமர்சித்த தமிழக கவர்னருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
* மாநில அரசின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அனைத்து தேவையும் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டம் உள்ளது.
* 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் மாநில புத்தகங்களில் இருந்து தான் டிஎன்பிஎஸ்சி-க்கு பயில்வோர் பயன்பெறுகின்றனர்.
* மத்திய அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களே 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு பாடப்புத்தகங்களை தான் படிக்கின்றனர்.
* நூலகத்தில் ஆய்வு செய்ய சென்றபோது அரசுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே மாநில பாடத்திட்டத்தை பாராட்டுகின்றனர்.
* கவர்னர் என்னோடு எந்த நூலகத்திற்கு வேண்டுமானாலும் வரலாம். அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை சந்தித்தால் உண்மை புரியும்.
* PM Sri புதிய திட்டங்களை நீங்கள் புகுத்தினாலும் கமிட்டி அமைத்து விசாரிப்போம். கமிட்டி அமைத்து அதன் பரிந்துரை அடிப்படையில் தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம்.
* சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விடவும் மேலானது மாநில பாடத்திட்டம், இதனை கமிட்டி அமைத்து விசாரித்தால் கவர்னரும் புரிந்துகொள்வார் என்று தெரிவித்தார்.
- ஸ்ரீமத் பகவத் கீதை காலத்தால் அழியாத ஞானத்தையும் தழுவுவதற்கு நம்மைத் தூண்டுகிறது.
- அனைத்து மனிதகுலத்தின் நலன் மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றவும் நமக்குள் உறுதி கொள்வோம்.
சென்னை:
இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
இந்த மகிழ்ச்சியான திருவிழா, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக மகத்துவத்தையும், ஸ்ரீமத் பகவத் கீதையின் காலத்தால் அழியாத ஞானத்தையும் தழுவுவதற்கு நம்மைத் தூண்டுகிறது. கர்ம கோட்பாட்டின்படி நடக்கவும் தேச வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படவும் அனைத்து மனிதகுலத்தின் நலன் மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றவும் நமக்குள் உறுதி கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
விசேஷமான #ஜென்மாஷ்டமியில், ஒவ்வொரு பாரதியருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்!இந்த மகிழ்ச்சியான திருவிழா, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக மகத்துவத்தையும், ஸ்ரீமத் பகவத் கீதையின் காலத்தால் அழியாத ஞானத்தையும் தழுவுவதற்கு நம்மைத் தூண்டுகிறது. கர்ம கோட்பாட்டின்படி நடக்கவும் தேச… pic.twitter.com/KjajVZBiPU
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 25, 2024
- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அடிக்கடி டெல்லி சென்று வருகிறார்.
- தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி அவர் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அடிக்கடி டெல்லி சென்று வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் டெல்லி சென்று திரும்பிய அவர் இன்று காலையில் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு புறப்பட்ட விகாஷா விமானத்தில் டெல்லி சென்றுள்ள கவர்னர் தனிப்பட்ட முறையிலேயே டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மத்திய மந்திரி அமித்ஷாவை கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி அவர் விவாதிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை இரவு 8.20 மணிக்கு சென்னை திரும்ப உள்ளார்.
- சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி.
- ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது.
சென்னை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,
சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி.
ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது.
அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக்கட்டை போடுவதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது.
அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளது.
திமுக கூட்டணி கட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மதிமுகவும் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது.
சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது.…
— Selvaperunthagai K (@SPK_TNCC) August 13, 2024
- இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசி உள்ளார்.
- தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா நன்கு அறிந்து வைத்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.
நேற்று பிரதமரை கவர்னர் சந்தித்த நிலையில், இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசி உள்ளார்.
இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறுகையில், தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து அக்கறை கொண்டவர் மத்திய அமைச்சர் அமித் ஷா. தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா நன்கு அறிந்து வைத்துள்ளார் என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்